Welcome To Indian Classical Music
Carnatic and Hindustani music has a rich and storied history that goes back many centuries.!
கர்நாடக இசை

தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.[1] செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.

ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன.

இந்துஸ்தானி

இந்துஸ்தானி இசை வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் தாளம், இராகம் முக்கியமான அங்கங்களாகும்.

வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும்.

13ம் நூற்றாண்டில் சாரங்கதேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மார்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும்.

வட இந்திய இசை வளர்ச்சியுறக் காரணமாக இருந்தவர்களுள் அமிர்குஸ்ரு முன்னோடியாக இருந்தவர் ஆவர். இவர் பல தாளங்களையும், இராகங்களையும், உருப்படிகளையும், புதிய வாத்தியங்களையும் அறிமுகப் படுத்தினார். கி.பி 14ம், 15ம் நூற்றாண்டுகளில் இந்துஸ்தானி இசை மிகப் பெரிய வளர்ச்சி பெற்றது. வட இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்கள் தம் அரசவையில் இசைக்கலைஞர்களை ஆதரித்து இசைகலையை வளர்த்தார்கள்.

இந்துஸ்தானிய இசை வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன் ஆவார். இவர் அக்பரின் அரசவையில் இரத்தினக் கல் போல் விளங்கினார்.

ஸ்வரம்
சப்த ஸ்வரங்கள் வடமொழிப் பெயர்கள் தமிழ் பெயர்கள்
ஷட்ஜம் குரல்
ரி ரிஷபம் துத்தம்
காந்தாரம் கைக்கிளை
மத்யமம் உழை
பஞ்சமம் இளி
தைவதம் விளரி
நி நிஷாதம் தாரம்
View More
இந்துத்தானி இசை வகைகள் :
  • துருப்பாது
  • கயல்
  • தப்பா
  • தரானா
  • துமரி
  • கசல்
  • தமர்
  • திரிவதம் (த்ரிவத்)
  • சைதி
  • தபகயல் (தப்கயல்)
  • அட்டபதி (அஷ்டபதி)
  • ததுரம் (தாத்ரா)
  • பசனம் (பஜனம்)

View More